சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அனைத்து கட்சி மற்றும் நகர் வர்த்தக சங்கம் சார்பாகவும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், முன்னாள் தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்க தலைவர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மானாமதுரை பழைய பேருந்து நிலையம் தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக நடந்து சென்று தங்கள் மவுன அஞ்சலியை செலுத்தி இரங்கல் உரை ஆற்றினார்கள். இதில் தேமுதிக சிவகங்கை மாவட்ட செயளாலர் ப. திருவேங்கடம், துணைச் செயலாளர் மாயழகு மற்றும் மானாமதுரை நகர் கழக செயலாளர் எம். வி. அழகு விசுவராசன் ஆகியோர் தலைமை தாங்கினர், நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மானாமதுரையை சேர்ந்த அனைத்து கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து கட்சி சார்பு அணி நிர்வாகிகள், அனைத்து கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தொண்டர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக மவுன அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment