சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள கத்தோலிக்க திருச்சபையான புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஞாயிறு நள்ளிரவு கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் பங்குத்தந்தை அவர்களால் உலக பொதுமக்களின் நன்மை வேண்டி சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் ஆலய பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, தன் மகிழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் இரண்டாவது வார்டு உறுப்பினர் இந்துமதி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, இரண்டாவது வார்டு செயலாளர் திருமுருகன், மேலப்பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன் மற்றும் திருச்சபையை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment