சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா இளையான்குடி வங்கி கிளையில் தாட்கோ எனும் மத்திய அரசின் கடன் திட்டத்தின் மூலமாக கடன் உதவி கேட்டதாகவும், அதற்கு இளையான்குடி யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் செல்வக்குமார் என்பவர் விஜயகுமாரை மரியாதை குறைவாக பேசியதோடு, அவர் சார்ந்த சாதியின் பெயரை கூறி, அதனால் தான் கடன் தரவில்லை என்றும் கூறியுள்ளார் என்பது தெரியவருகிறது.
எனவே வங்கி மேலாளரின் இத்தகைய இழிவான செயலை கண்டிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பில் வங்கி மேலாளரை வன்மையாக கண்டித்து செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இளையான்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையின் புறவழிச்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராவணன் சுரேசு அவர்கள் மாபெரும் கண்டன பேருரை ஆற்றினார், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி செயலாளர் பொறியாளர் ச. ஆனந்தன் முன்னிலை வகித்தார். மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment