சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி தெற்கு ஒன்றியம் சாலைகிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் இளையான்குடி தெற்கு ஒன்றியம் முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.50 லட்சம் மதிப்பில் நாடக மேடைக்கான அடிக்கலும் நாட்டினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு. செல்வராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வே. தமிழ்மாறன், கிளை செயலாளர் கோபிநாதன், ஊராட்சிமன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment