சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை கொண்ட கட்டிடத்தை மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினருடன் பள்ளி மாணவிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவிகள் திரலாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment