மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ தியாக விநோத பெருமாள் திருக்கோவில் "பரமபத வாசல் திறக்கும் வைபவம்" நாளை நடைபெறும். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 December 2023

மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ தியாக விநோத பெருமாள் திருக்கோவில் "பரமபத வாசல் திறக்கும் வைபவம்" நாளை நடைபெறும்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கிழ் இயங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ தியாக விநோத பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு "பரமபத வாசல் திறக்கும் வைபவம்" நடைபெற உள்ளது. இதில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு பரமபதவாசல் திறக்கும் வைபவமும், அதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு மேல் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது. 


இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக அருள்மிகு ஸ்ரீ தியாக விநோதப் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட இருக்கிறது. மேலும் இந்நிகழ்வானது சிவகங்கை மாவட்ட அறங்காவலர் ஏ.ஆர். ஜெயமூர்த்தி அவர்களின் தலைமையிலும், அறங்காவலர் குழு தலைவர் ரா. கார்த்திக் அறங்காவலர்கள் க. ராமலட்சுமி மற்றும் மு. சங்கிலி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. ஆகவே பக்தகோடி பெருமக்கள் அனைவரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு அருள் பெருமாறு அறங்காவலர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad