ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத ஏகாதசி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்றும், வாழ்ந்து முடித்த பிறகு வைகுண்ட சொர்க்கத்தில் உள்ள விஷ்ணு பகவானின் பாதங்களில் இடம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இந்த வருட ஏகாதசி வழிபாடு சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீ வீர அழகர் சமேத ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் விரதம் இருந்து நீராடி அதிகாலை முதலே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment