சிவகங்கை மறை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள சவேரியார் பட்டணம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழைமையான புனித அவேரியார் ஆலயத்தில் "புனித சவேரியார் பெருவிழா" கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அருட்பணி முனைவர் வி. அருள்ஜோசப் அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலியுடன் வெகுவமரிசையாக நடைபெற்றது. அவருடன் அருட்பணி ரிச்சர்ட், அருப்பணி ஜான் பிரிட்டோ பங்குத் தந்தை அருட்பணி புஸ்பராஜ் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
தருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணியளவில் புனித சவேரியார் தேர்ப்பவணி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து இறைமக்கள் இறையாசீர் பெற வேண்டி கூட்டம் கூட்டமாக வந்து பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஞாயிறு காலை 10 மணிக்கு அருட்பணி ஜோசப் செங்கோல் மற்றும் பங்குத்தந்தை ஆகியோர் திருவிழா நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றினர். பின்னர் புனித சவேரியாரின் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment