சிவகங்கை மாவட்டம் (டிசம்பர் 4) திங்கள்கிழமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம். முழுமையான சுற்றுப்பயண விவரங்களை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வெளியிட்டுள்ளார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2023

சிவகங்கை மாவட்டம் (டிசம்பர் 4) திங்கள்கிழமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம். முழுமையான சுற்றுப்பயண விவரங்களை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வெளியிட்டுள்ளார்.


சிவகங்கை மாவட்டத்தில் டிச.4ம் தேதி இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம், கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அமைச்சர் உதயநிதியின் சுற்றுபயணம் குறித்து திமுக சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில்; சிவகங்கை மாவட்டத்தில் டிச. 4ம் தேதி கழக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று இளைஞரணியினரை நேரில் சந்தித்து வருகிறார்., அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 


4ம்தேதி மாலை 4.00 மணிக்கு திருப்பத்தூர் அருகே நகர வைரவன்பட்டி பகுதியில்  நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். அதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு  அரளிக்கோட்டை கிளைகழகத்தின் சார்பில்  அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவுக்கம்பத்தில் மாலை 5.30 மணியளவில் கழக கொடியினை  ஏற்றுகிறார். தொடர்ந்து பெருமாள்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு கொடியினை ஏற்றிவைக்கிறார். தொடர்ந்து 1500 கழக மூத்த முன்னோடிகளுக்கு சிவகங்கையில் பொற்கிழி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். 


அதனைத் தொடர்ந்து இரவு 8.00 மணியளவில் தேவகோட்டையில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரூசோவின்  சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது இல்லத்தில் ருசோவின் திருஉருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார். இரவு 9.00 மணிக்கு ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார் . இந்த நிகழ்ச்சிகளில் கழக இளைஞரணி, மாவட்ட கழக  நிர்வாகிகள், தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள்,  ஒன்றிய, நகர, பேருர்,கழக  நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்  பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்", இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad