சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சியில் குருந்தங்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட போர்வெல், சின்டெக்ஸ் மற்றும் தண்ணீர் தொட்டியினை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மானாமதுரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரைராஜா மணி, ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, கிளைக் கழகச் செயலாளர் கருப்பையா, கிளைக் கழகப் பிரதிநிதி முருகேசன், செங்கிஸ்கான், கீழப்பசலை சிவா, இளைஞர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment