இந்தியாவிலேயே பலத்த பாதுகாப்பு நிறைந்த இடமான நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து புகை குப்பிகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனையொட்டி ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சரமாரியாக இடைநீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த 142 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாசிச பாஜக மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையிலும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. அருணகிரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நகர வட்டார காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment