சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியம் குண்டுகுளம் கிராமத்தில் புதியகாக கட்டி முடிக்கப்பட்ட மின்மாற்றியினை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார். அதேபோல் இளையான்குடி வண்ணாரவயல் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வரத்துக் கால்வாயினையும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், பேரூர் கழக செயலாளர் பி.ஏ. நஜ்மூதின், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காளிமுத்து, இப்ராஹிம், பைரோஸ்கான் மற்றும் வினோத், மின்வாரிய செயற்பொறியாளர் மற்றும் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment