சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி மேற்கு ஒன்றியம் கச்சாத்தநல்லூரில் உள்ள பிரதான கால்வாயினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், இளையான்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் க. வெங்கட்ராமன், கட்சி நிர்வாகிகள் அய்யாச்சாமி, மலைமேகு, மோகன், சுப. தமிழரசன், காளிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி சௌந்தர், தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment