அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 9வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 December 2023

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 9வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஜிக்யாசா மற்றும் ஏசிஎஸ்ஐஆர் சார்பாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 9வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக அவுட்ரீச் நிகழ்ச்சி இயற்பியல் மற்றும் வேதியியல் மாணவர்களுக்கு நடைபெற்றது.அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி மற்றும் மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநர் முனைவர் ரமேஷா  அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

அழகப்பா அரசு கலைக்  கல்லூரியின் முதல்வர்  (பொறுப்பு) முனைவர். முருகேசன் தலைமை உரையாற்றினார் . மூத்த விஞ்ஞானி முனைவர் அங்கப்பன் வரவேற்றார்.  விழாவை கொண்டாடுவதன் காரணம் மற்றும் முக்கியத்துவத்தை மூத்த விஞ்ஞானி முனைவர். இலஷ்மிநரசிம்மன் எடுத்துரைத்தார். விழாவின் ஒரு பகுதியாக சிறப்புரையாற்றிய தலைமை விஞ்ஞானி வாசுதேவன்  இன்றைய இயற்கைப் பேரிடருக்கு ஒரு காரணமான கரியமில வாயுவை (CO2) எவ்வாறு குறைப்பது மற்றும் மாற்று எரிசக்தியான ஹைட்ரஜனின் பயன்பாடு குறித்து உரையாற்றினார். 


மேலும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களால் மிக முக்கியமான ஆய்வு கண்டுபிடிப்புகள் சிலவற்றின் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டு கல்லூரிக்கு உபகரணங்கள்  வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவியல் வினாடிவினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மூத்த விஞ்ஞானி முனைவர். முருகன் நன்றி கூறினார்.


- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.

No comments:

Post a Comment

Post Top Ad