சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மானாமதுரை அஇஅதிமுக சார்பாக நகர் கழக செயலாளர் திரு விஜி போஸ் அவர்களின் தலைமையில் செல்வி ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினர். '
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம் குணசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர் எஸ். நாகராஜ், மாவட்டம் கவுன்சிலர் ஏ.சி. மாரிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சின்னை மாரியப்பன், நகர் மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment