இளையான்குடி கண்மாய்க்கரை பேருந்து நிறுத்தம் அருகில் கழிப்பறை கட்டுமான பணிகள் நிறுத்தம், பணி முடிக்கப்படும்? பொதுமக்கள் கேள்வி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 November 2023

இளையான்குடி கண்மாய்க்கரை பேருந்து நிறுத்தம் அருகில் கழிப்பறை கட்டுமான பணிகள் நிறுத்தம், பணி முடிக்கப்படும்? பொதுமக்கள் கேள்வி.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நேர்வுநிலை பேரூராட்சி கண்மாய்க்கரை பேருந்து நிறுத்தம் அருகில் கழிப்பறை அமைத்து தர  முதலமைச்சரின் தனிப்பிரிவில் திரு பெரியசாமி என்பவர் ஏற்கனவே புகார் மனு அளித்திருந்தார். 

அம்மனுமீதான நடவடிக்கையாக தூய்மை இந்தியா 2.0 திட்டம் 2022-2023ன் கீழ் கண்மாய்க்கரை பேருந்து நிறுத்தம் அருகில் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் ஆண் பெண் இருபாலருக்குமான கழிப்பறை கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணியாணையும் வெளியிடப்பட்டது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கண்மாய்க்கரை அருகில் பழைய என்.எம்.கே டேங்க் முன்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு பில்லர் கட்டுமானப்பணி நடைபெற்றும் வருகிறது. 


இதற்கிடையில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரால் பணியானது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே தொய்வடைந்த பணி நிறைவடையுமா இல்லையா? என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக கட்டுமான பணிகளை பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad