சிவகங்கை மாவட்ட சுற்றுலா கார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் உரிமையாளர்களின் சார்பாக அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவையின் சிவகங்கை மாவட்ட தலைவர் அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக வாகன வரி சம்பந்தமாக மனு கொடுத்தார்.
அம்மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு காலாண்டு வரி கட்டுவதா அல்லது ஆயுள் வரி செலுத்துவதா என தங்களுக்கு தெரியவில்லை எனவும், வரி தொடர்பான சந்தேகங்களை பற்றி தங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும், வரி செலுத்துவதற்கு அரசு நிர்ணயித்த கால அவகாசம் கூடிய விரைவில் முடிவடைவதால் அபதாரம் ஏதுமின்றி வரி கட்டுவதற்கு வழிவகை செய்து தருமாறு தங்களை கேட்டுக்கொள்வதாக அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment