அடுத்த மாதம் டிசம்பர் 17 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் 2 வது எழுச்சி மாநாடு நடைபெற இருப்பதையொட்டி 'எழுச்சி நாயகர்களின் இருசக்கர வாகன பிரச்சார பேரணி' இன்று மானாமதுரை சட்டமன்றத் தொகுதி மானாமதுரை - சிவகங்கை செல்லும் பிரதான நகர் பகுதிகளின் வழியாக வந்தடைந்த நிலையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் பேரணியினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு. மேலும் அவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள், குளிர்பானங்கள், பழங்கள் போன்றவற்றை அளித்து அவர்களுடைய பயணம் வெற்றி பெற மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக முழக்கங்களையும் கோஷங்களை எழுப்பி தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் க. பொன்னுசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, நகர ஒன்றிய பேரூர் கிளை, அனைத்து சார்பு அணியினர்கள் மற்றும் முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment