சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் ஒவெசெ மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பாக 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்கள், என்ஐடி மற்றும் யூடிஐடி அடையாள அட்டை பதிவு, மருத்துவ உபகரணங்கள், இஎன்டி மருத்துவ ஆலோசனை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு மற்றும் உதவித்தொகை போன்ற என்னற்ற சிறப்பு அம்சங்களை நல்வாய்ப்பாக பயன்படுத்தி பயன்பெற்றனர்.
மேலும் இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment