சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி மற்றும் நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 27 வார்டு நகர மன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் சாலையில் சுற்றி வரும் மாடுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது, அதனைத் தொடர்ந்து அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், வடிகால் உள்ளிட்ட தங்கள் வார்டு மக்களின் பொது தேவைகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பதிவு செய்யப்பட்டதோடு மனுக்கள் மற்றும் புகார்களை நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வழங்கினர்கள்.
மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த விவாதங்களும் புதிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment