சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கோட்டையூர் ஊராட்சி சிறுபாலை கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளின் அருகே மழைநீர் தெப்பம்போல் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மழை நீர் செல்ல வடிநீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரத்திற்கு உள்ளாகி வருவதாகவும், மழைநீரால் சூழ்ந்துள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
எனவே உடனடியாக மழைநீரை அகற்ற ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment