சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி அருகில் மாணவர்களின் உயிரை காவு கொள்ளும் நீட் தேர்வை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்த "50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தினை" இணையதளம் மூலமாக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன், இளையான்குடி பேரூர் கழகச் செயலாளர் நஜிமுதீன், நகர் பொருளாளர் இப்ராகிம், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், இளைஞர் அணி கார்த்தி மற்றும் பரணி, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், திமுக கட்சி நிர்வாகிகள் காளிமுத்து, கருணாகரன், முருகேசன், தனசேகரன், சௌந்தர், ஜெயின், கனி, சிவமணி, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் இஸ்ரின் பேகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணியினர் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment