சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'ஹார்ட் புல்னெஸ்' என்ற நிறுவனம் பசுமை மாரத்தான் போட்டியை நடத்தியது. மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு சிவகங்கை கோட்டாட்சியர் கு. சுகிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறுவர்கள் இளைஞர்கள் என தனித்தனியே முறையே இரண்டு மற்றும் ஐந்து கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியை கண்டு களித்த பொதுமக்கள் வழி நெடுகிலும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். இதில் 5 கி.மீ பிரிவில் மானாமதுரையை சேர்ந்த சுரேந்தர் முதலிடம் பிடித்தார்.
மேலும் மரம் வளர்ப்பு, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட இந்த மராத்தான் போட்டி நிகழ்ச்சியில் மானாமதுரை வட்டாட்சியர் திரு ராஜா, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி, நகர் செயலாளர் பொன்னுச்சாமி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment