சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி காந்தி சிலை எதிர்ப்புறம் அஞ்சல் அலுவலகம் அருகில் மானாமதுரை - சிவகங்கை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் பயணிகள் அமரும் நிழற்குடை கட்டிடமானது சரியான பராமரிப்பின்றி அவல நிலையில் இருந்து வந்த நிலையில் நமது தமிழக குரல் செய்தி எதிரொலியின் காரணமாக உடனடியாக நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஏற்கனவே இருந்து வந்த பழைய பயணிகள் நிழற்குடையை முற்று முழுதாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தம் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்புதிய பயணிகள் நிழற்குடையை ஏற்படுத்தி தந்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியிட்ட நாளிதழுக்கும் பொதுமக்களுக்கு தங்கள் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment