இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார், நகர் செயலாளர் பொன்னுசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு துரை. ராஜாமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அரசுத்துறை அதிகாரிகள், திமுக கட்சியை சேர்ந்த ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக மானாமதுரை பிரதான நகர் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே வருகை தந்த 'முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி' பயணத்தில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் மலர்தூவி வரவேற்றதுடன், முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment