சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பயணியர் விடுதி எதிரே உள்ள பகுதியில் வசித்து வந்தவர் கவிதா (45) கணவர் தங்கமணி. இவர்களது மகன் கடந்த ஆண்டு அமுதம் தியேட்டர் அருகில் கொலை செய்யப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மகனை இழந்த கவிதா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வீட்டில் தனது மனைவியை காணவில்லை என மானாமதுரை காவல் நிலையத்தில் கவிதாவின் கணவர் தங்கமணி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தங்கமணி வீட்டின் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள குளத்தின் தண்ணீரில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment