இப்பணிகளைக் கண்காணித்திட ஒவ்வொரு தொகுப்பிற்கும் ஒரு பணித்தள பொறுப்பாளர் என நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் மூலம் பணிக்கு வருபவர்களின் வருகை பதிவை ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வருகிற 30 ஆம் தேதியன்று மியாவாக்கி எனும் குறுங்காடுகளை வளர்த்தெடுக்கும் திட்டத்தின் பொருட்டு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் இடங்கள் தேர்வு செய்து மரக்கன்றுகள் நடுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் கீழமேல்குடி ஊராட்சி மன்றத் தலைவர் நூறு நாள் வேலைத்திட்டத்தின் பணியளர்கள் மூலமாக மரக்கன்றுகளை ஏற்றி வருமாறு பணியாளர்களை பணித்துள்ளார்.
அப்போது முருகன் என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்யும் பயனாளிகளின் பிரதிநிதியாகிய ஊராட்சி மன்றத் தலைவரை தரக்குறைவாகப் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தும் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. எனவே மேற்காணும் நபர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட கோரி கடிதம் மூலமாக பணித்தள பொறுப்பாளர் அவர்கள் மானாமதுரை நகர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு புகார் மனு அளித்துள்ளார்.
No comments:
Post a Comment