சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சூராணத்தில் தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண் பெண் இருபாலருக்குமான மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் தலைமையிலும், மாவட்ட வழக்கறிஞர் பாசறை இணை செயலாளர் ஜீவாசேவியர் மற்றும் ஜெயராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இப்போட்டியில் 302 வீரர்கள் பங்கேற்றனர். மேலும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை தூத்துக்குடியைச் சேர்ந்த மாணிக்கதுரை வென்றுள்ளார். பெண்கள் பிரிவில் முதல் பரிசை சகாயராணி மேல்நிலைப்பள்ளியின் மாணவி அபி ஸ்ரீ பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு தொகையும் கேடயமும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment