மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு, சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2023

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு, சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணை.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் சின்ன கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி மகேஸ்வரி (53) ஆவார். இவர் நேற்று தனது வீட்டில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸை தொட்ட போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக அவரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியில் பரிதாபமாக  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே இச்சம்பவம் குறித்து சந்தேகித்த மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad