சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் சிறிய கம்பெனிகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலை வளாகமொன்றில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ஜோசப் ஆரோக்கிய சேவியர் (50). இவர் நேற்று இரவு பணியில் ஈடுபட்டுள்ள போது தொழில் வளாகத்தில் உள்ள சாம்பிராணி கம்பெனியிலிருந்து சாம்பிராணி செய்யும் அச்சு இயந்திரம் காணாமல் போனதை தெரிய வந்ததையடுத்து ஆரோக்கிய சேவியர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிப்காட் டி2 காவல் நிலைய போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பின்னர் பேத்து செல்வம் (18) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment