கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் துரை முன்னிலை வகித்தார். முதுகலை மன்றப் பொறுப்பாளர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார் .தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன், பேராசிரியர்கள் முனைவர் குமார், முனைவர் சிதம்பரம், முனைவர் அமுதா, இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவி அபிநயா, மூன்றாமாண்டு இளங்கலை மாணவி அழகு, இரண்டாமாண்டு இளங்கலை மாணவி ஸ்ரீமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொருளியல் துறைத் தலைவர் முனைவர் ஏ பி எஸ் செல்வராஜ் மாணவர்களின் எதிர்காலத்தை செம்மைப்படுத்தக்கூடிய துறை தமிழ்த்துறை என்றும் மாணவர்கள் உயர்ந்த பதவிகளில் இருப்பதே ஆசிரியர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்றும், கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் பெறும் அனுபவமே அவர்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்றும் அனுபவமே அவர்களின் சிறந்த வாழ்விற்கு அடித்தளம் இடுகிறது என்றும் அதற்கு மாணவர்கள் அவர்களின் பலம், பலவீனத்தை அறிந்து செயல்பட வேண்டுமென்று தனது சிறப்புரையில் கூறினார்.
இளங்கலை மாணவி வசிதா மற்றும் முதுகலை மாணவி பவித்ரா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். இளங்கலை மன்ற பொறுப்பாசிரியர் முனைவர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment