சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மேலக்கொன்னகுளம் கிராமத்தில் அமைந்துள்ள "அருள்மிகு ஸ்ரீ ஒச்சக்கால் திருக்கோயில் கும்பாபிஷேக விழா" வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை. ராஜாமணி, ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துச்சாமி, மேலக்கொன்னகுளம் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி மற்றும் கிராம பொதுமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment