சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட அழகப்பா பல்கலைகழக நுழைவாயில் பகுதியில் நடைபெற்ற “நடப்போம் நலம் பெறுவோம்” நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பங்கேற்று சிறப்பித்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் உடல்நலத்தினை சரிவர பேணிகாத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், பொதுமக்களிடையே தினமும் நடப்பதை ஒரு பழக்கமாக மாற்றும் நோக்கில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டத்தின் மூலம் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் 8 கீ.மி நடைபயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டத்தினை அறிவித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைமுறைப்படுத்துவதற்கான சிறப்பான நடவடிக்கைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், அறிவுரையின்படி “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தினை, இளைஞர் நலம் மற்றம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட அழகப்பா பல்கலைகழக நுழைவாயில் பகுதியில் நடைபெற்ற “நடப்போம் நலம் பெறுவோம்” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற நடைபயிற்சியானது, 8 கி.மீ தூரம் வரை மேற்கொள்ளும் பொருட்டு, காரைக்குடி அழகப்பா பல்கலைகழக நுழைவு வாயில் அருகில் தொடங்கி, உமையாள் இராமநாதன் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர், அழகப்பா பூங்கா, பொறியியல் கல்லூரி பல்கலைகழக கட்டிடம், தேசிய மாணவர் படை முகாம் வழியாக மீண்டும் அழகப்பா பல்கலைகழக நுழைவு வாயில் அருகில் வந்தடைந்து நிறைவுபெற்றது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் 10 ஆயிரம் அடிகள் அதாவது 8 கீ.மி தினமும் நடப்பதால்இ சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் 28 சதவீதமும், இதய நோய் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என்று அறியப்படுகிறது. மேலும், நடைபயிற்சியானது நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும், உதவுகிறது.
நடப்பது குறைந்து உடற்பயிற்சி இல்லாததால் ,தற்போது தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே நடப்பதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபயிற்சிகள் மேற்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியின் இறுதியில், ஆரோக்கியமான வாழ்க்கை நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்திடவும்இ அதில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைபயிற்சியில் பொது மக்களோடு இணைந்து, சுகாதார பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளீட்டோர்களும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர். பொது மக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற திட்டங்களை பொது மக்கள் கருத்தில் கொண்டு, அதில் தங்களுடைய பங்களிப்பினை முழுமையாக அளித்து, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் ந.குணசேகரன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிராபாவதி, காரைக்குடி வட்டாட்சியர் ப.தங்கமணி, நடைபயிற்சி சங்க பிரதிநிதிகள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலா்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment