தமிழ்த் துறைத் தலைவர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரலாறு திரும்புகிறது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி மாவீரன் அலெக்சாண்டர், அன்னை தெரசா, மகாத்மா காந்தியடிகள், வினோபாவே போன்ற வரலாற்று நாயகர்களை எடுத்துக்காட்டி மாணவர்கள் அவர்கள் காட்டிய பாதையில் செயல்பட்டு தங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். மூன்றாம் ஆண்டு மாணவி அபிநயா நன்றி கூறினார். முதலாம் ஆண்டு மாணவர்கள் வசந்த்ராஜா, சௌந்தர்யா ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனைவர் முத்துக்குமார், முனைவர் மார்ட்டின் ஜெயபிரகாஷ், முனைவர் குணசேகரன், முனைவர் வேலாயுத ராஜா, முனைவர் சரவணன்,கெளரவ விரிவுரையாளர்கள் முனைவர் கிளிமொழி, முனைவர் தங்கராஜ் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment