அதன்மூலம் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர், திட்டங்கள் இருந்து வருகின்றன. அந்தவகையில், மரங்கள் அதிக அளவு வளர்த்து பயன்பெற வேண்டும் என்பதுடன், மீண்டும் பனைமரங்கள் அதிக அளவு வளர்த்து நீர்நிலை ஆதாரங்களை பாதுகாத்திடும் வகையிலும், பழமைவாய்ந்த சிறப்புக்களின் ஒன்றான பனைமரங்கள் வருங்காலத்தில் இளைஞர் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று , தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.
இத்திட்டத்தினை துறை ரீதியாக செயல்படுத்திடும் பொருட்டு, அச்சமயம் 2 இலட்சம் பனைவிதைகள் நடவு செய்யும் பணியினையும், தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மெகா பனைவிதைகள் நடும் பணி திட்டம் துவக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 26.10.2023 அன்று மாபெரும் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சுமார் 461000 (நான்கு இலட்சத்து அறுபத்தொன்றாயிரம்) பனை விதைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்டுள்ளது.
இதன் நோக்கம், பாரம்பரியம் வாய்ந்த பனைமரம் வளர்ப்பது மட்டுமன்றி, இதன்மூலம் நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் போன்றப்பகுதிகளின் கரையோரங்களிலும் மற்றும் சாலை ஓரப்பகுதிகளிலும் பனைவிதைகள் நடவு செய்து பனைமரங்கள் வளர்க்கும் பொழுது, விவசாயிகளின் நண்பனாக இருந்து நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கும் வகையில் கரைகள் பலப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, இதன்மூலம் பல்வேறு வகையான மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் என பல்வேறு வகையிலும் ஏழை எளியோர் மக்களுக்கான நண்பனாக திகழ்ந்து வருகின்றது. இதன் பராமரிப்பு என்பது மிகக்குறைவு. பனைவிதைகள் நடவு செய்து ஓராண்டுகள் பராமரித்தாலே தொடர்ந்து தானாக வளர்ந்து பலனைத்தரக்கூடிய அளவிற்கு சிறப்புவாய்ந்த மரமாகத் திகழ்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கிராமப்பகுதிகளிலும் அதிக அளவு இருந்த பனைமரம் தற்பொழுது குறைந்துள்ளது. அதை மீண்டும் அதிக அளவு வளர்த்து வரும் இளைஞர் சமுதாயம் பாதுகாத்திடும் வகையில் இத்தகையத் திட்டத்தை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
No comments:
Post a Comment