மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது எப்படி அதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள், ட்ரோன் பயன்படுத்துவது மூலம் மருந்து கலவை நீர் துளிகள் பயிர்களில் இலைகளின் மீது நேரடியாக பாயும்.இதனால் 90 சதவீத தண்ணீர் உபயோகத்தையும் 40 சதவீத பூச்சிகொல்லும் மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடிகின்றது.
ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை ட்ரோன் மூலமும் 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து தெளிக்கலாம்.இவ்வாறு ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைந்து இலாபம் அதிகரிக்கிறது.வேலையாட்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகின்றது. நெற்பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்க படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கின்றது. இந்த ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு அதிகளவில் கை கொடுக்கும் என தெரிவித்தார்.
மேலும் இந்த செயல்விளக்கத்தில் விவசாயிகள், வேளாண்மை அலுவலர் அபர்ணா, உதவி வேளாண் அலுவலர் வீரராகவன், மாரிமுத்து, பிரேமலதா, அந்தோனி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சதீஸ், லட்சுமி பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment