மானாமதுரையை அடுத்த மேலப்பசலை மேம்பாலத்தில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2023

மானாமதுரையை அடுத்த மேலப்பசலை மேம்பாலத்தில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மதுரை - ராமேஸ்வரம் செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலப்பசலை மேம்பாலத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற மினி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதோடு, சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பயணித்தவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து மானாமதுரை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad