மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டபோது கூறுகையில், இவ்வழியே மருத்துவமனைக்கு நடந்து செல்லும் நோயாளிகளுக்கும், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் குப்பை கழிவு சாலையில் வடிந்தோடும் சாக்கடை போன்றவற்றால் நோய் தொற்றும் அபாய சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகளை கொண்ட தயா நகர் மற்றும் தாயாபுரம் ரயில்வே கேட் பகுதிகளில் போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாததால் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதற்கு வேறு வழி இன்றி பொதுமக்கள் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்ற அபாயகரமான அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் விளைவாக துர்நாற்றம் கொசு போன்றவற்றால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். மருத்துவமனை செல்லும் பிரதான சாலையே இது போன்ற சுகாதாரமற்ற நிலையில் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் விரைந்து தலையிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பைத்தொட்டி, கழிவு நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை அமைத்து தர தயாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment