மானாமதுரையில் அக்காவை கழுத்தறுத்துவிட்டு போலீசில் சரணடைந்த உடன்பிறந்த தம்பி, பொதுமக்களிடையே பரபரப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2023

மானாமதுரையில் அக்காவை கழுத்தறுத்துவிட்டு போலீசில் சரணடைந்த உடன்பிறந்த தம்பி, பொதுமக்களிடையே பரபரப்பு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ராமு. இவரது மகள் தேவயானி (23) பி.எட் பட்ட படிப்பு முடித்துள்ளார். தேவயானியின் தம்பி கண்ணன் படித்து முடித்துவிட்டு தனது தந்தை நடத்திவரும் கறிக்கடையில் தன் தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு வீட்டிற்குள் இருந்து தேவயானியை கண்ணன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். உடனடியாக வழக்கு பதிவு செய்த மானாமதுரை காவல்துறையினர் எதற்காக அக்காவை கொலை செய்தார் என்ற அடுத்தகட்ட விசாரணையை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இப்படி உடன்பிறந்த சொந்த தம்பியே அக்காவின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad