தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நூறாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை நகராட்சி சேர்மன் சுந்தரலிங்கம், அமமுக பொறுப்பாளர் தேர்போகி பாண்டி, பா.ஜ.க பொறுப்பாளர்கள் காசிராஜா, பாலகிருஷணன்,சுப்பிரமணியன், மற்றும் தி.மு.க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரன் ஒரு திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியினை வெள்ளை யானை அறக்கட்டளை பொறுப்பாளர் ம.அறிவுக்கனல்,அருணாசலம்,உஞ்சனை நாட்டாமை தலைவர் ராஜ்குமர் சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆகியோர் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment