சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி வார்டு என் 2 பட்டத்தரசி பகுதிகளில் பல நாட்களாக தெரு விளக்குகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் என யாரும் பொதுவெளியில் கடைகளுக்கோ மற்ற இடங்களுகோ சென்றுவர முடியாத நிலையில் தெரு நாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாலும், திருடர் பய உணர்வுடன் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர் மன்ற உறுப்பினரும் உடனடியாக தலையிட்டு மின்விளக்குகள் அமைத்தும், தெரு நாய்களை அப்புறப்படுத்தியும் வார்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment