இது குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தபோது, "மானாமதுரையில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் முனியாண்டி என்பவரின் மகள் அம்முவை காதலித்து வந்ததாகவும், இதை அறிந்த முனியாண்டி தனது மகளை சிவகங்கையில் உள்ள சபரி என்பவருக்கு கல்யாணம் முடித்து விட்டதாகவும், பின்பு தொடர்ந்து அம்முவின் தொடர்பில் பாலசுப்பிரமணியன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தொடர்பை அறிந்து கொண்ட சபரியின் அண்ணன் காளீஸ்வரன் என்பவர் தனது தம்பியின் மாமனாரான முனியாண்டி இடம் இதுகுறித்து எடுத்து சொல்லி பாலசுப்பிரமணியனை கண்டித்து வைக்குமாறு கூறியுள்ளார்.
எனவே முனியாண்டி இதுகுறித்து கேள்வி கேட்க தன்னுடன் ஆட்களை அழைத்துக் கொண்டு பாலசுப்பிரமணியன் இல்லத்திற்கு சென்று தன் குடும்பத்தை கெடுக்க வேண்டாம் என்றும், தன் மகளை விட்டுவிளகி கொள்ளுமாறு கேட்டு கண்டித்துள்ளார். தொடர்ந்து நடந்த வாக்குவாதம் மற்றும் தகராறில் பாலசுப்ரமணியன் முனியாண்டியின் ஜாதி பெயரை கூறி மானபங்கப்படுத்தி அறிவாளால் தலை மற்றும் கைகளில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்படுத்து சம்பவ இடத்திலேயே முனியாண்டி பலியாகி உள்ளார். மேலும் அன்புகுறி என்பவர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்த மானாமதுரை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியன், தனரசன் கார்த்திக் ராஜா, மாலா, சத்யா ஆகிய ஐந்து பேரு மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட வழக்குகளின் கீழ் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இந்த குற்றவாளிகளில் சில பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது" என்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment