இரண்டு மாதங்களுக்கு முன்பு மானாமதுரை கன்னார் தெரு டாஸ்மாக் கடையில் நடந்த திருட்டில் ஈடுபட்ட நபர் அதிரடி கைது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 October 2023

இரண்டு மாதங்களுக்கு முன்பு மானாமதுரை கன்னார் தெரு டாஸ்மாக் கடையில் நடந்த திருட்டில் ஈடுபட்ட நபர் அதிரடி கைது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கண்ணார் தெருவில் கடை எண் 7544 என்ற அரசு மதுபான கடை மற்றும் பார் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த மதுபான கடையை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் ரொக்க பணம் மற்றும் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களையும் திருடிச் சென்ற சம்பவம் சுற்றுப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதே கடையில் லாக்கரில் இருந்த சுமார் ஆறு லட்சம் ரூபாய் திருடர்கள் கண்ணில் படாமல் தப்பியதும், திருடர்கள் தங்களின் தடையங்களை காவல்துறையின் கண்களுக்கு புலப்படாதவாறு மறைப்பதற்கு கடையை சேதப்படுத்தி தப்பித்தும் குறிப்பிடத்தக்கது. 


மானாமதுரை நகர் காவல்துறைக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சேதமடைந்த கடையை மேற்பார்வை செய்து அருகில் உள்ள வீட்டாரிடம் கூடுதல் தகவல்களை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்து திருடர்களை பிடிக்க தீவிர விசாரணை மற்றும் தனிபடை போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.


இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடப்பட்டு வந்த நிலையில் வாடிப்பட்டி அருகே வடகரையை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் செல்வக்குமார் (23) என்பவரை டிஎஸ்பி திரு கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் மானாமதுரை டி1 காவல்நிலைய ஆய்வாளர் திரு முத்து கணேஷ், சார்பு ஆய்வாளர் திரு பூபதி ராஜா பால சதீஷ் கண்ணன் மற்றும் மானாமதுரை காவல் நிலைய காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad