சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி காந்தி சிலை எதிர்ப்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் பயணிகள் அமரும் நிழற்குடை கட்டிடமானது சரியான பராமரிப்பின்றி சுகாதாரமற்று துர்நாற்றம் வீசும் அவல நிலையில் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரிடம் கேட்டரிந்தபோது கூறுகையில், "இந்த பயணிகள் நிழற்குடையானது இந்திய அஞ்சல் அலுவலகம் அருகிலும், மானாமதுரை - சிவகங்கை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளது.
இதில் மது பிரியர்கள் மது அருந்துவதும், பீங்கான் மற்றும் பிலாஸ்டிக் பாட்டில்களை ஆங்காங்கே விட்டுச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருவதால், பகல் மற்றும் வெயில் நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு விரும்பத்தகாத வகையில், பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் அறுவருக்கத்தக்க நிலையிலும் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி அலுவலகங்கள் செல்பவர்களுக்கும், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்வதற்கும் இடையூறாக சுவரொட்டிகள் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள் போன்றவற்றாலும் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்தனர். கூடுதலாக இரவு நேரங்களில் மது அருந்துபவர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் மது அருந்துவது, சிறுநீர் கழிப்பது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக" தெரிவித்தனர்.
No comments:
Post a Comment