தமிழக அரசு துாய்மை பணியாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மேம்பாட்டுத்திட்டத்தை கொண்டு அவர்களுக்கான வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான துாய்மை பணியாளர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு முகாமில் தரைமட்ட கழிப்பறை தொட்டியை துாய்மைப்படுத்தும், வாகனங்களில் பணிபுரிவோர் புதை சாக்கடை துாய்மை பணியில் ஈடுபடுவோர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சமுதாய, பொது கழிப்பிடங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்களிடம் உரிய விபரங்களை துாய்மை பணியாளர்கள் வழங்கி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் திரு வேல்முருகன், திருமதி சண்முகப்பிரியா, துப்புரவு ஆய்வாளர் திரு பாண்டிசெல்வம் துப்புரவு மேற்பார்வைகள் திரு கார்த்தி, திருமதி ஹரிணி, திருமதி சிவராணி, திரு பிரபு துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் திருமதி காயத்ரி, பரப்புரையாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment