சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மனவளர்ச்சி குன்றி காணப்படும் வட மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் பிச்சை எடுப்பதாக கூறி சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நபர்கள் ஆங்காங்கே கடைகளின் வாசல்களில் தங்கியும் உறங்கியும் வருவதாகவும் தெரிய வருகிறது. இவர்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தாலும் இடையூறுகளும் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கடை வியாபாரிகள் மற்றும் ரோட்டோர வியாபாரிகளிடம் கருத்து கேட்டபோது அவர்களில் சிலர் கூறுகையில், "வட மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சில நபர்கள் கடந்த சில மாதங்களாக தங்களிடம் வந்து பிச்சை கேட்டு தொந்தரவு செய்கின்றனர், காசு கொடுக்கவில்லை என்றால் தகாத தடித்த வார்த்தைகளில் தங்களுடைய மொழிகளில் திட்டி வருகின்றனர். மானாமதுரையில் மக்கள் அதிகமாக கூடும் வார சந்தை நாளான ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த நபர்கள் இங்கு வந்து காசு கேட்டு தொந்தரவு செய்வது வாடிக்கையாகி வருகிறது.
மேலும் இவர்கள் பகல் நேரத்திலும் மது போதையில் தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிக காசு கொடு என்று பிடிவாதம் செய்தும், அச்சுறுத்தும் வகையில் செய்கைகளால் கைகளை அசைத்து காண்பித்தும் வருகின்றனர். இச்செயலில் பெண்கள் திருநங்கைகள் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர்களால் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம், எனவே இவர்கள் மீது உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர் விளாவாரியாக.
மேலும் இது குறித்து மானாமதுரை நகர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களிடம் விசாரித்த போது தெரியவருவதாவது, "இப்பிற மாநில நபர்கள் தங்கள் வீட்டு வாசலில் இரவு நேரங்களில் மதுபானங்கள் அருந்தியும், பீடி சிகரெட் போன்றவற்றை உபயோகப்படுத்தியும், சிறுநீர் வாந்தி போன்ற சுகாதாரமற்ற அசுத்தங்களையும் செய்தும், வாசலில் இருக்கும் காலணிகள் போன்ற பொருட்களை எடுத்து சென்று விடுகின்றனர். பெண் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் தாய்மார்கள் போன்றவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது" என்றனர் வேதனையுடன். ஆகவே பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாத வகையில் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டனர்.
எனவே இக்குற்ற செயல்களில் ஈடுபடும் இது போன்றவர்களை நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் வியாபாரிகள் சங்கம் இணைந்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்களும் கடை வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment