சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட இளையான்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், பேரூராட்சி மன்ற தலைவர் நஜ்முதீன், துணைத் தலைவர் இப்ராஹிம், மாவட்ட பிரதிநிதி கருணாகரன் ராஜபாண்டி, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், காளிமுத்து, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஹைதர் அலி, நடராஜன், திருமதி இஸ்ரின் பேகம், பைரோஸ்கான், அன்பரசன், அழகேசன், அழகு பாண்டி, ஆரிப் ஜெயின், காதர், இப்ராஹிம் ஷா, வெற்றிவேல், ராஜா சிங்கு, கனி, செயல் அலுவலர் கோபிநாத், பள்ளி தலைவர் அஸ்புல்லா கான், தாளாளர் தவுலத் முகமது மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment