என் கே எப் சவுத் ஜோன் கராத்தே சாம்பியன்ஷிப் 2023' க்கான போட்டிகள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மானாமதுரையை சேர்ந்த நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர் இரா. கபினேஷ் கட்டா பிரிவில் முதல் பரிசான தங்க பதக்கம் மற்றும் சண்டை பிரிவில் இரண்டாம் பரிசான வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
வருகிற டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் டெல்லியில் 'டல்கட்டோரா இன்டோர் ஸ்டேடியத்தில்' நடைபெறவுள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளார். மாணவர் கபினேஷ் அவர்களுக்கு பயிற்சியாளர் மாஸ்டர் சிவ. நாகர்ஜூன் தன் சார்பாகவும் தனது பள்ளியின் சார்பாகவும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment