சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்ஊரணி காலனியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டும் பணி தொடங்க இருக்கும் நிலையில் பழைய வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது இலங்கை தமிழர் முகாமில் ஊராட்சிதுறை சார்பில் ஐந்து லட்சத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளது.
சிவகங்கை அருகே ஒக்கூர் கிராமத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு அங்கு இலங்கை தமிழர் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் மானாமதுரை மூங்கில்ஊரணி முகாமில் சுமார் 108 குடும்பங்கள் உள்ளதாகவும் இதில் முதல் கட்டமாக 52 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய வீடு கட்டி தருவதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். இப்பணிகள் தொடங்கப்பட்டதால் இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment