சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பி. கே. மஹாலில் 'மாநில மகளிர் தொண்டரணி' சார்பாக 'டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ. கீதா ஜீவன் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரும் ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் திரு. மு. தென்னவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி நாமக்கல் ராணி, திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் திரு சேங்கைமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் திருமதி விஜிலா சத்யானந்த், பேராசிரியர் திரு டி. எம். என். தீபக், திரு சொக்கம் ராஜா, திருநங்கைகளான பிரியா பாபு, சோலு, தாய் இல்லம் திரு கே .டி .ஜே புஷ்பராஜ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் முறையே சுமார் 600 நபர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment